தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி தஞ்சையில் நேற்று நடந்த 200 கி.மீ. தூர விழிப்புணர்வு மனித சங்கிலியில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்
விழிப்புணர்வு மனித சங்கிலி தஞ்சையில் நேற்று நடந்தது. இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கும் வகையில் அணைக்கரையில் இருந்து கடற்கரை வரையிலும், கல்லணையில் இருந்து தஞ்சை வரையிலும் 200 கி.மீ தூரத்திற்கு விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. இதில், ரெட்கிராஸ், யூத் ரெட்கிராஸ், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.