பள்ளி பஸ் விபத்து தடுப்பு விதிகளை திருத்த வேண்டும் !

பள்ளி பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை திருத்தியமைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு தாம்பரத்தில் பள்ளி
பேருந்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து பள்ளி பேருந்துகளில் ஏற்படும் விபத்தை தடுப்பதற்காக தமிழக அரசு அரசாணை ஒன்று பிறப்பித்தது. அதன்படி கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு விபத்தை தடுப்பதற்காக புதிய விதிகள் வகுக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு வரவேற்பு அளித்துள்ளது. மேலும் புதிய விதியில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாகவும் அதை திருத்தியமைக்க வேண்டும் எனவும் அந்த கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
அதன்விவரம் வருமாறு:
* பள்ளி வாகனங்களில் தற்போது பணிபுரியும் உதவியாளர்களே தொடர்ந்து பணியாற்றும் வகையில் அரசாணை மாற்றப்பட வேண்டும்.
* விதி எண் 6(5)ன் படி பள்ளி வாகனத்தின் முதல்படியின் உயரம் 250 மி.மீ அல்லது 300 மி.மீ அளவுக்கு இருக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
* பள்ளி பேருந்தின் பின்புறம் 150 செ.மீக்கு 120 செ.மீ அளவில் அவசர வழி அமைக்க வேண்டும் என்ற விதியை மாற்றி ஏற்கனவே உள்ள 90 செ.மீக்கு 60 செ.மீ என்ற அளவிலேயே அவசர வழி அமைக்க உத்தரவிட வேண்டும்.
* ஏற்கனவே பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி வைக்க வேண்டும் என்ற அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை கட்டாயமாக்க கூடாது.
* துணை ஆணையர் தலைமையில் 5 அலுவலர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து பள்ளி பேருந்துகளுக்கு தகுதி சான்று வழங்கும் என்பது பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே இதை மாற்றி ஆர்டிஓ மற்றும் ஆய்வாளர் நிலை-1 ஆகியோரை கொண்ட குழு அமைத்து ஆணையிட வேண்டும்.
இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...