அடுத்த ஆண்டுக்குள் புதிதாக 2 லட்சம் மத்திய அரசுப் பணிகள் !

அடுத்த ஆண்டுக்குள் (2017) புதிதாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது: சிறப்பான நிர்வாகத்தை அளிக்கும்
வகையிலும், அரசின் பல்வேறு துறைகளை வலுப்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக புதிதாக 2.18 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமாக, மத்திய உள்துறை அமைச்சகத்தில் 5,635 பணிடங்களும், மத்திய பாதுகாப்புப் படைகளில் 47,264 பணியிடங்களும், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் 10,894 பணிடங்களும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தில் 1,080 பணியிடங்களும், அணுசக்தித் துறை அமைச்சகத்தில் 6,353 பணியிடங்களும், வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் 2,072 பணியிடங்களும், சுரங்கத்துறையில் 12,902 பணியிடங்களும் பணியாளர் நலத்துறை அமைச்சகத்தில் 1,796 பணிடங்களும் உருவாக்கப்பட்ட உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...