நமக்கு உணவளிப்பவர்களுக்கு உதவ ,நிதி சேகரிக்கும் ஐ.டி., ஊழியர்கள் !!!

கடன் சுமையால் சிக்கி தவிக்கும் 121 விவசாயிகளுக்கு உதவி செய்வதற்கு, ஐ.டி., ஊழியர்கள் நிதி சேகரித்து வருகின்றனர்.

இதற்காக அபுல்கி என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதில் விருப்பமுள்ளவர்களை சேர்த்து நிதி சேகரித்து மகாராஷ்டிராவில் பருத்தி அதிகம் விளையும் 5 மாவட்டங்களை சேர்ந்த 121 விவசாயிகளுக்கு உதவ முடிவு செய்துள்ளனர்.


இந்த தொண்டு நிறுவனம் மூலம் ஐ.டி., ஊழியர்களிடமிருந்து ரூ. 3 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கடனை அடைப்பதற்காக ரூ.85 லட்சம் வசூலிப்பது என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பணி குறித்து அபுல்கியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்கள் முதலில் தேர்வு செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 ஏக்கர் குறைவாக உள்ள விவசாயிகள் கண்டறியப்பட்டனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது எனக் கூறினார்.

உள்ளூர் தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் அளித்த அடிப்படையில் இந்த தகவல் சேகரிக்கப்பட்டது. அபுல்கியின் குழுவினர் சம்பந்தப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து தற்போதைய நிலை குறித்து கணக்கிடப்பட்டது.

இந்த குழுவின் கணக்குப்படி வார்தா பகுதியில் 25 விவசாயிகள் பயன்பபெற உள்ளனர். அவர்களின் ரூ.21,38,582 கடன் அடைக்கப்பட உள்ளது. வாஷிம் பகுதியில் 25 விவசாயிகளின் ரூ.12,57,762 கடன் அடைக்கப்பட உள்ளது. அமராவதி பகுதியில் 27 விவசாயிகளின் ரூ.18,34,402 கடன் அடைக்கப்பட உள்ளது. யவடாமல் பகுதி 25 விவசாயிகளின் ரூ.12,72,104 கடன் அடைக்கப்பட உள்ளது. அகோலா பகுதி 19 கோடி ரூ.18,62,200 கோடி கடன் அடைக்கப்பட உள்ளது.

அபுல்கி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனை தனி நபராலோ, தனி அமைப்பாலோ, தொண்டு நிறுவனத்தாலோ, அரசு அமைப்புகளால் மட்டுமோ தீர்க்க முடியாது. கூட்டு முயற்சி எடுத்தால் தான் சிறிதளவு நிவாரணமாவது கிடைக்கும். எனவே, நாங்கள் சிறிதளவு நிதியுதவி செய்வதற்காக தெரிந்த நபர்களை தொடர்பு கொண்டு வருகிறோம். வசூலிக்கப்படும் பணம் நேரிடையாக வங்கியில் செலுத்தப்படும். விவசாயிகளின் கைகளில் ஒப்படைக்கப்படாது.

உதவி செய்யும் நிறுவனங்களுக்கு விவசாயிகளின் கடன் விவரம் அளிக்கப்படும். எங்கள் இயக்கத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் எனக்கூறினார். இந்த அமைப்பு, வெளிநாட்டை சேர்ந்த தன்னார்வலர்கள், நிறுவனங்களில் உதவி கேட்க முடிவு செய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...