தேர்தல் நேரங்களில் மக்கள் கைகளில் ரூ.60 ஆயிரம் கோடி புழக்கம் இருப்பதாகவும் இது சாதாரணமானதல்ல என்பதால் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
தமிழகம், புதுவை, அசாம், மேற்கு வங்கம் கேரள மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அசாம்
மற்றும் மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் மாநிலங்களிலும், தேசிய அளவிலும் முக்கியத்துவம் பெறும். இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட விபரம் ஒன்றில், மார்ச் 18 வரையில், பணப்புழக்கம் 48 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதனால் பணப்புழக்கம் குறித்த யூகங்கள் மற்றும் காரணம் குறித்து ஆராய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், வங்கி டெபாசிட் 10 சதவீதத்திலிருந்து 9.9 சதவீதம் கீழ் வரை குறைந்துள்ளது. இது கடந்த 53 ஆண்டுகளில் மிகவும் குறைவாகும். பண்டிகை காலங்களில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கும் என ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது.
இந்நிலையில், சிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம ராஜன் கூறுகையில், தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். இதற்கான காரணம் என்ன என்பதை நீங்கள் யூகிக்க முடியும். நாமும் யூகம் செய்யலாம். இருப்பினும், இந்த நேரத்தில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் புழக்கம் இருப்பது சாதாரணமனது அல்ல. ஒரு மாநிலத்தில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. சில அண்டை மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதனை நாம் புரிந்து கொள்வது சிறந்தது எனக் கூறினார்.