எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் மே 9-ம் தேதி !

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் மே 9-ம் தேதி முதல் தொடங்கும் என மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.விண்ணப்பங்களை அரசு மருத்துவ கல்லூரி
மருத்துவமனைகளில்பெற்றுக்கொள்ளலாம். அல்லது tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மே 27ம் தேதி மாலை5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியல் வரும் ஜூன் 15-ல் வெளியிடப்படும். ஜூலை மாதம் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டைப் போலவே 2655 இடங்கள் காலியாக உள்ளன.

இதுதவிர 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1010 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இவற்றில் 415 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கின் கீழ் வரும். அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் நிரப்பப்படும். இவற்றில் 15 இடங்கள் அகில் இந்தியா கோட்டாவுக்காக ஒதுக்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...