இன்ஜினியரிங் துறை சார்ந்த படிப்புகள் குறித்து, கல்வியாளர் அலமேலு: இன்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுக்கும் முன், தேர்ந்தெடுக்கும் படிப்புக்கான வேலைவாய்ப்பு, சம்பளம், எதிர்கால நிலை ஆகியவற்றை நன்கு ஆராய வேண்டும். கல்லுாரிகளை தேர்ந்தெடுக்கும் முன், அவற்றின் தன்னாட்சி, பதிவு, வளாக நேர்காணல், தொழிற்சாலைகளுடனான தொடர்பு,
நுாலக வசதி உள்ளிட்ட தகுதிகளை ஆராய வேண்டும்.
வரும் காலங்களில், துணை நகரம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதால், சிவில் இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைகள் பெரும் வளர்ச்சி பெறும்.
'மீடியா ஸ்டடீஸ்' மற்றும், 'அனிமேஷன்' படிப்புகள் குறித்து, பேராசிரியர் பாலாஜி:
'மீடியா ஸ்டடீஸ்' படிப்பை அடுத்தவர்களின் வற்புறுத்தலுக்காக, யாரும் தேர்ந்தெடுக்க வேண்டாம். அதேபோல், இந்த படிப்பை படிக்க நினைப்பவர்களை தடுத்து, மருத்துவம், இன்ஜினியரிங் படிப்பிலும் சேர்க்க வேண்டாம். காரணம், இது, கற்பனை வளமும், படைப்பாற்றலும் உள்ளவர்களுக்கான படிப்பு.
அச்சு, காட்சி ஊடகம், வானொலி, இணையம், திரைப்படம் உள்ளிட்ட பல ஊடகங்களிலும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்சார் படிப்புகளிலும், 'அனிமேஷன்' என்னும் வரைகலையின் தேவையும், 'சினிமோட்டோகிராபி, எடிட்டிங், ரிப்போர்ட்டிங்' உள்ளிட்ட பல துறை சார்ந்தவர்களின் தேவையும் அதிகம் உள்ளது.
மருத்துவத் துறை சார்ந்த படிப்புகள் குறித்து, 'பார்மசூட்டிக்கல்' துறை பேராசிரியர் எஸ்.கிருஷ்ணன்: உலக சுகாதார அறிக்கையின் படி, 1,000 பேருக்கு, ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டில், 1,400 பேருக்கு, ஒரு மருத்துவர் என்ற நிலை தான் உள்ளது. அதனால், இங்கு மருத்துவரின் தேவை அதிகம் உள்ளது. எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தாலும், அவரவரின் முயற்சி, திறமைக்கேற்பவே பெயரும், புகழும், பணமும் கிடைக்கும்.