சென்னை, மாநில கல்லுாரி விடுதியில் நடந்த ஆபாச நடனத்துக்கு, கல்வியாளர்களும், ஆசிரியர் சங்கத்தினரும் கடும் கண்டனம், வேதனை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க மாநில கல்லுாரி விடுதி வளாகத்தில், கல்லுாரி முதல்வர் பிரம்மானந்த பெருமாள் துவக்கி வைத்த நிகழ்ச்சியில், நள்ளிரவில், 'காபரே' ஆட்டத்தை மிஞ்சும் அளவுக்கு, நடன
கலைஞர்கள் ஆடிய சம்பவம், கல்வியாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
மாணவர்கள், பேராசிரியர்கள், விடுதியின் துணை காப்பாளர் ஆகியோர் முன் நடந்த இந்த நிகழ்ச்சியில், பெண் நடன கலைஞர்கள், உடல் முழுவதும் தெரியும் படி, ஆண் கலைஞர்களுடன் சேர்ந்து ஆபாசமாக ஆடிய காட்சிகள், கல்வியாளர்களின் கண்களில் கண்ணீரையே வரவழைத்துள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர் சங்கங்களின் கருத்துகள்:கே.பி.ஓ.சுரேஷ், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்: கல்வி நிறுவன வளாகத்தில், ஆபாச நடனங்களை எப்படி அனுமதித்தனர். இந்த நிகழ்ச்சியை ஊக்குவித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக உயர் கல்வித்துறை, இந்த பிரச்னையை வேடிக்கை பார்க்கக் கூடாது. மாணவர்களுக்கு ஒழுக்கமும், கண்ணியத்தையும் ஊட்ட வேண்டிய ஆசிரியர்களே இதை அனுமதிப்பது தவறு.
ஆர்.தங்கமுனியாண்டி, தலைவர், 'நெட், ஸ்லெட்' பட்டதாரிகள் சங்க தலைவர்:
இது, உயர்கல்வித் துறைக்கு பெருத்த அவமானம். பேராசிரியர்களிடையே ஒழுக்கத்தை மீறி செயல்படுவது அதிகரித்துள்ளது. இதேபோல், தென் மாவட்டத்தில், இரண்டு பேராசிரியர்கள் மீது விபசார வழக்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வியில் அனைத்தும் பணமே என்பதால் ஒழுக்கம் மறைந்துவிட்டது.
ஜே.காந்திராஜ், பல்கலைகளின் ஆசிரியர்கள் சங்க பொருளாளர்:
பள்ளிகளும், கல்லுாரிகளும் கோவிலை போன்றது. கோவில் வளாகத்தில் எப்படி நடந்து கொள்வோமோ அப்படித் தான், கல்வி நிறுவனங்களிலும் செயல்பட வேண்டும். கல்லுாரி விழாவோ, மாணவர் விடுதி விழாவோ, ஒழுக்க நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்.
தற்போது மாநில கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சி, மற்ற கல்லுாரிகளுக்கு தவறான முன்னுதாரணமாக மாறிவிடக் கூடாது. அதற்குள், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.சிவராமன், கல்லுாரி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர்:
பார்க்கவே முடியாத அளவுக்கு நிகழ்ச்சி நடந்துள்ளதாக, செய்தி வெளி வந்துள்ளது. இதுகுறித்து, கல்லுாரி கல்வி இயக்ககம், உயர்கல்வி செயலகம் உடனடியாக விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லுாரி விழா, விடுதி விழாக்களுக்கு கட்டுப்பாடு, விதிமுறைகளை வகுக்க வேண்டும்.இவ்வாறு சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.