தேர்தலை நடத்த நவீன" ஆப்"

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை, சுமுகமாகவும், எளிதாகவும் நடத்த உதவும், 'ஆப்'களை, பீஹார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது.
பாட்னாவைச் சேர்ந்த, எஸ்.இ.ஆர்.பி.எல்., என்ற தனியார் நிறுவனம், மொபைல் போன்களில் பயன்படுத்தக்கூடிய வகையில், 'சமாதான், சுவிதா, சுகம்' மற்றும் பி.எம்.எப்., ஆகிய நான்கு,
'ஆப்'களை உருவாக்கி உள்ளது. இந்த 'ஆப்'கள், சட்டசபை தேர்தலை, பிரச்னையின்றி, சுமுகமாக, எளிதாக நடத்த உதவும்.



இதுகுறித்து, எஸ்.இ.ஆர்.பி.எல்., நிறுவன மேலாண்மை இயக்குனர் சஞ்சீவ்சங்கர், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி விவரம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், தேர்தலை சுமுகமாக நடத்த உதவும், 'ஆப்'களின் மூலத்தை, எங்களிடம் கேட்டுப் பெற்றுள்ளது. இதை, எங்கள் உதவியுடனோ அல்லது தாமாகவோ பயன்படுத்திக் கொள்வது குறித்து, அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகம் தவிர, அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில், தேர்தல், 'ஆப்'கள் பயன்படுத்தப்படுகின்றன.



சமாதான், 'ஆப்' மூலம், வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை பதிவு செய்ய முடியும். புகார் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு, புகார் கிடைக்கப் பெற்றதை உறுதி செய்யும், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.



சுவிதா, 'ஆப்' கட்சி பாகுபாடின்றி, வெளிப்படையான முடிவுகளை மேற்கொள்ள, தேர்தல் கமிஷனுக்கு உதவும். இதன்மூலம், தேர்தல் கூட்டம் நடத்துதல், வாகனப் பயன்பாடு, பிரசாரம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். வாகனங்கள் மேலாண்மை விஷயத்தில், சுகம் 'ஆப்' உதவும். இந்த 'ஆப்' கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில், தேர்தல் கமிஷனால் பயன்படுத்தப்படுகிறது. சமாதான், சுவிதா, சுகம் ஆகிய மூன்று, 'ஆப்'களும், ஏற்கனவே, 2015ல், பீஹார் மாநில சட்டசபை தேர்தலின்போது பயன்படுத்தப்பட்டவை.



புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள, பி.எம்.எப்., 'ஆப்' ஓட்டுச்சாவடிகளில், தேர்தல் கமிஷனின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க உதவும். தேர்தல் நடக்கும் மாநிலங்களில், தேர்தல் அதிகாரிகளுக்கு உதவும் வகையில், போதிய நிபுணர்கள் அடங்கிய குழுக்களை நியமித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...