ஆசிரியர் பற்றாக்குறை அமைச்சர் தொகுதியில் அரசுபள்ளிக்கு பூட்டு !

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே, சுகாதாரத் துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால், பொதுமக்கள் பள்ளிக்கு பூட்டு போட்டனர்.
விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட விராலுார் அருகே, சங்கம்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
உள்ளது. இங்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார்.
இங்கு, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 61 மாணவர்கள் படித்து வருகின்றனர். அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், அந்த ஒரு ஆசிரியர் மட்டுமே வகுப்பு எடுத்து வந்துள்ளார். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கல்வித் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு, கிராம மக்கள் புகார் அளித்தனர். நடவடிக்கை எதுவும் இல்லாததால், நேற்று காலை, பள்ளிக்கு பொதுமக்கள் பூட்டு போட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...