பெண்­க­ளுக்கு எஸ்.ஓ.எஸ்., ஆப் கார்பன் மொபைல் அறி­முகம் !

கார்பன் மொபைல்ஸ் நிறு­வனம், தன் மொபைல் போனில், பெண்கள் பாது­காப்­பிற்­காக, தனி ஆப் சேவையை வழங்க உள்­ளது. மத்­திய அரசு, ‘மொபைல் போன் தயா­ரிப்பில் ஈடு­பட்டு உள்ள நிறு­வ­னங்கள், 2017க்குள், ஆபத்து காலங்­களில் அழைக்கும்
வகையில், பேனிக் பட்­டனை மொபைல் போனில் ஏற்­ப­டுத்த வேண்டும்’ என, உத்­த­ர­விட்­டுள்­ளது. இந்­நி­லையில், கார்பன் நிறு­வனம், பெண்கள் பாது­காப்­பிற்­காக, மொபைல் போனில், எஸ்.ஓ.எஸ்., என்ற, ‘ஆப்’ வச­தியை அறி­முகம் செய்ய முடிவு செய்­துள்­ளது. இதன் மூலம், அவர்­க­ளுக்கு பாது­காப்பு அளிக்கும் வகையில், சேவை வழங்­கப்­படும்.இது­கு­றித்து, கார்பன் நிறு­வன அதி­காரி ஒருவர் கூறு­கையில், ‘மொபைல் போனில், பல சேவைகள் வழங்கி வரு­கிறோம். அந்த வகையில், பெண்கள் பாது­காப்­புக்­கான இந்த எஸ்.ஓ.எஸ்., ஆப்பை உரு­வாக்கி இருக்­கிறோம். இன்னும் இரண்டு மாதங்­களில் அறி­மு­கப்­ப­டுத்த இருக்­கிறோம்’ என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...