மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வரைவு அறிக்கை தயாரிப்பில், இரண்டாவது சுற்று போட்டியிலும் தமிழக நகரங்கள் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும், 100 நகரங்களை, ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்துவதற்கான திட்டத்தை, மத்திய அரசு, 2015 துவக்கியது. முதல்கட்டமாக, தமிழகத்தைச் சேர்ந்த, 12 நகரங்கள் உட்பட நாடு முழுவதும், 97 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த நகரங்களின் நிர்வாகங்களிடம், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கான வரைவு அறிக்கைகள் கோரப்பட்டன. வரைவு அறிக்கையை தயாரித்து அளித்ததில் சிறப்பாகச் செயல்பட்ட முதல், 20 நகரங்களின் பட்டியலை, சில மாதங்களுக்கு முன், மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை
வெளியிட்டது.
இந்த பட்டியலில், கோவை, 13வது இடத்தையும்; சென்னை, 18வது இடத்தையும் பெற்றன. 2015 நவ., - டிச., மாதங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக, திட்ட அறிக்கை தயாரிப்பில் ஏற்பட்ட தாமதமே, பட்டியலில், தமிழக நகரங்களின் பின்னடைவுக்குகாரணமாக கூறப்பட்டது.
இரண்டாவது சுற்றுஅடுத்த கட்டமாக, திட்ட அறிக்கை தயாரித்து அனுப்புவதற்கான, இரண்டாவது சுற்று போட்டியை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த சுற்றில் முன்னிலை பெற்று தேர்வாக, நகரங்களின் நிர்வாகங்கள், ஜூன், 30க்குள் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே, முதல் சுற்றில் தமிழக நகரங்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது சுற்றிலாவது, முதல் வரிசை இடங்களை பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் பணிகளால், ஸ்மார்ட் சிட்டிக்கான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதல் சுற்று போட்டியில், 20 இடங்கள் குறித்த விவரங்களை மட்டுமே மத்திய அரசு வெளியிட்டது. 97 நகரங்களின் பட்டியலில், மதுரை, சேலம், வேலுார், நெல்லை, துாத்துக்குடி, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, திருப்பூர் ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது சுற்றில் முன்னேறி செல்ல, வரைவு திட்டங்களை விரைந்து அனுப்ப வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகள்:ஆனால், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், குறிப்பிட்ட காலத்துக்குள் வரைவு திட்டங்களை விரைந்து அளிக்க முடியுமா என்பது தெரிய வில்லை. இதனால், ஸ்மார்ட் சிட்டி திட்ட தயாரிப்புக்கான மதிப்பீட்டில், தமிழக நகரங்கள் தொடர்ந்து பின்தங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.