வருவாய் துறை பதவி உயர்வு தேர்தல் கமிஷன் அனுமதி !

தமிழக வருவாய்த்துறையில், தாசில்தார், துணை தாசில்தார் பதவி உயர்வுக்கான பட்டியல் தயாராக இருந்தும், தேர்தல் தேதி அறிவிப்பால் பதவி உயர்வு தரப்படவில்லை.வழக்கமான பதவி உயர்வு தான் என்பதால், தேர்தல் கமிஷனின் அனுமதி கோரப்பட்டது; ஒரு மாதத்திற்கு மேலாகியும் அனுமதி கிடைக்கவில்லை.

                          அதிருப்தி அடைந்த வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அவர்களுடன் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தி, 'சில நாட்களில், அனுமதி கிடைக்கும்' என, உறுதி அளித்ததால், போராட்ட முடிவு கைவிடப்பட்டது.இந்த நிலையில், ஒரு மாதமாக கிடப்பில் இருந்த மாவட்ட வாரியான பதவி உயர்வுக்கு, தேர்தல் கமிஷன், அடுத்தடுத்துஅனுமதிஅளித்துள்ளது.'இன்னும், மூன்று மாவட்டங்களுக்கு மட்டுமே அனுமதி பாக்கி உள்ளது; அதற்கும், ஓரிரு நாளில் அனுமதி கிடைத்து விடும்' என, வருவாய்த்துறை அலுவலர்கள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...