மின் வசதி இல்லாத கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு, சூரிய மின் சக்தி மூலம் அவ்வசதி ஏற்படுத்தி தர, தனியார் எரிசக்தி நிறுவனத்துடன், சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி.,
இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, ஆராய்ச்சி துறை பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா மற்றும் ஏ.பி.பி., நிறுவன தலைமை செயல் அலுவலர் உல்ரிச் ஸ்பைஸோபர் ஆகியோர் அளித்த பேட்டி:
பல மாநிலங்களில் உள்ள குக்கிராமங்கள், பெரும்பாலான மலை கிராமங்களில் மின் வசதி இல்லை. அங்கு மின் தொகுப்பு அமைத்து, மின்தொடர் அமைக்க முடியவில்லை. எனவே, மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் கழகமான, ஆர்.இ.சி.,யுடன் சேர்ந்து, மின்சார வசதியை, 100 சதவீதமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இதன்படி, சென்னை ஐ.ஐ.டி.,யுடன், ஏ.பி.பி., நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'லித்தியம் பேட்டரி' மூலம் வீடுகளுக்கு மின்சார வசதி செய்யப்படும். சூரியசக்தி உற்பத்தி மூலம், பேட்டரியில் மின்சாரத்தை சேமித்து, 'மைக்ரோ கிரிட்' என்ற குறு மின்தொகுப்பு மூலம், வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்படும். இதன் மூலம் குறைந்த செலவில், சூரிய மின் சக்தி அமைப்பு அமைத்தல்; சிறிய பேட்டரி உருவாக்குதல் போன்ற தொழில் நுட்பங்களை, ஐ.ஐ.டி., மாணவர்கள், ஏ.பி.பி., நிறுவனத்திற்கு வழங்குவர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.