ஓட்டு போடுங்கள்' 'பாப்' பாடல் வெளியீடு !

திரைப்பட இசை அமைப்பாளர் பால் ஜேக்கப், பிளேஸ் ஆகியோர் இணைந்து, ஓட்டு போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 'பாப்' பாடல் ஒன்றை இயற்றி, இசை அமைத்து, 'ஆல்பம்' தயார் செய்துள்ளனர். இப்பாடல், 2 நிமிடம், 45 வினாடி ஒலிக்கும்.இப்பாடல், 'சிடி' வெளியீடு, நேற்று தலைமைச்
செயலகத்தில் நடந்தது. தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, 'சிடி'யை வெளியிட்டார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கிர்லோஷ் குமார் உடனிருந்தார்.

'சிடி' குறித்து, இசை அமைப்பாளர்கள் பால் ஜேக்கப், பிளேஸ் கூறுகையில், ''இந்தப் பாடல், 'ரேடியோ, பேஸ்புக், டுவிட்டர்' ஆகியவற்றில் வெளியிடப்படும். அடுத்து, 30 வினாடிகள் மட்டும் ஒலிக்கும் பாடல்ளை தயார் செய்ய உள்ளோம்,'' என்றனர்.
ராஜேஷ் லக்கானி கூறும்போது, ''இப்பாடல், சினிமா தியேட்டர்களிலும் திரையிடப்படும். செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனங்கள் மூலம், கிராமங்களில் திரையிடப்படும். பொது இடங்களில், பாடவும் ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...