ஆன்லைனில் அனுமதி அளிப்பது எப்படி: பயிற்சி இல்லாததால் அதிகாரிகள் தவிப்பு !

புதிய மென்பொருளை கையாள பயிற்சி அளிக்காததால், ஆன்லைனில் அனுமதி அளிக்க தெரியாமல், தேர்தல் பிரிவு அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.தமிழக சட்டபை தேர்தல், வரும் மே 16ம் தேதி நடக்கிறது. இதற்காக, பல்வேறு மாற்றங்களை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் பிரிவு அதிகாரிகளை சந்தித்து, அனுமதி பெறும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


குறிப்பாக, தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம், பணிமனை திறப்பு மற்றும் வாகனங்களுக்கு அனுமதி உள்ளிட்ட நடவடிக்கைகளில், கடந்த காலங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் அனுமதி பெற்று, அரசியல் கட்சியினர் பணிகளை செய்து வந்தனர்.
இதில், ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக நடந்து கொள்வதாகவும், அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், தமிழகம் முழுவதுமே பரவலாக புகார்களும், குற்றச்சாட்டுகள் எழுந்ததை பார்க்க முடிந்தது.

இந்நிலையில், தேர்தல் பணிகளை ஆன்லைனில் மேற்கொள்ள வசதியாக, புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதை, தேர்தல் ஆணையம் நேரடியாக கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய மென்பொருளை கையாள்வது எப்படி? என்பது குறித்து, தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு, இதுவரை எந்தவித பயிற்சியும் அளிக்கவில்லை. இதனால், அவர்கள் மனுக்களை பெற்றுக் கொண்டு, ஆன்லைனில் அனுமதி அளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.அதேபோல், புதிய மென்பொருள் பயன்படுத்துவது குறித்து, அரசியல் கட்சியினருக்கு எந்தவித பயிற்சியோ அல்லது பயன்படுத்தும் முறை குறித்து இதுவரை அதிகாரிகளும் தெரிவிக்காததால், அவர்கள் ஆன்லைனில் அனுமதி பெற முடியாமல் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...