அலுவலக பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி வருகிறது.திருவாடானை உதவி கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கான ஊதிய பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட அலுவலக பணிகளில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்
ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் பள்ளிகளில் பாடம் நடத்த முடியாத நிலையில் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி வருகிறது.
இது குறித்து ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் லியோஜெரால்டு எமர்சன் கூறுகையில்,“ திருவாடானை உதவி கல்வி அலுவலகத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை வரவழைத்து பணியாற்ற வைக்கின்றனர் அனைவருக்கும் கல்வி திட்ட பகுதி நேர ஆசிரியர்களும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கபடுகிறது. அலுவலர்களிடத்தில் கேட்டால் சி.இ.ஓ. விடம் அனுமதி வாங்கிவிட்டோம் என்கின்றனர்,” என்றார். உதவி கல்வி அலுவலர் ஜெயா கூறுகையில்,“ ஒரு ஆசிரியரை கூட பணியாற்ற அழைக்கவில்லை. அலுவலகத்தில் போதுமான பணியாளர்கள் உள்ளனர். அவர்களை வைத்து தான் புள்ளிவிபர வேலைகள் நடக்கிறது. வேண்டுமென்றே பொய்யான குற்றசாட்டை சங்கத்தினர் கூறுகின்றனர்,” என்றார்.