கோடை விடுமுறை நாட்களில், தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சிறப்பு வகுப்பு நடத்த கூடாது என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.
பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், தனியார் பள்ளிகளில்
ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 சிலபஸ்சை, ஜூன் மாதம் துவங்கி, ஜன.,க்குள் முடித்து விடுகின்றனர். பிப்., துவக்கத்தில் இருந்தே, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை துவக்கி விடுகின்றனர்.
இதனால், தனியார் பள்ளிகளில் கூடுதலாக மூன்று மாதங்கள் வரை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வில் மாநில அளவில், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களில் தேர்ச்சி பெறவும், நூறு சதவீத தேர்ச்சி பெறவும் இந்நடவடிக்கையை, தனியார் பள்ளிகள் மேற்கொள்கின்றன.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் கொளுத்துகிறது; கடுமையான வெப்பநிலை நிலவும் இச்சூழலில், சிறப்பு வகுப்புகளுக்கு மாணவ, மாணவியர் வந்து செல்வது கடும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், கோடை கால சிறப்பு வகுப்புகளை, தனியார் பள்ளிகள் முற்றிலும் தவிர்க்க, கல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் மீறி, சிறப்பு வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.