மதுரையில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் தடகள, விளையாட்டுகளுக்கு தாமதமாக பணம் அனுப்பப்படுவதால் அரசுப் பள்ளிகள் போட்டிகள் நடத்தமுடியாமல் திணறுகின்றன.
விளையாட்டு துறையை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த
மூன்றாண்டுகளாக பள்ளிக்கல்வித் துறை மூலம் ரூ.10 கோடி வழங்கப்பட்டு வந்தது. பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் மாதத்திலேயே செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு விடும். குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் ஜூலை, ஆகஸ்டிலும், கல்வி மாவட்ட போட்டிகள் ஆக., செப்.,லும் நடத்தப்படும். வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கும், தடகள போட்டிகளுக்கும் அக்., நவ.,ல் முடிந்துவிடும். புதிய விளையாட்டு போட்டிகளும் நடத்தி முடிக்கப்படும்.
அரசு பள்ளி அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளே போட்டிகளை நடத்தவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஒவ்வொரு நிலை போட்டிகளை நடத்துவதற்கும் லட்சக்கணக்கில் செலவாகும். இதற்கான தொகை மொத்தமாக டிச., அல்லது ஜன.,யில் தான் வழங்கப்படுகிறது. அதுவரை போட்டிகளை கடன் வாங்கி நடத்த வேண்டியுள்ளது.பள்ளிகளில் பொதுநிதியின் கீழ் பணத்தை பெறவும் வழியில்லை. ஏனென்றால் இந்த பணமும் அரசின் மூலம் தாமதமாகவே வழங்கப்படுகிறது.
இதனால் அரசுப் பள்ளிகள் போட்டிகளை நடத்தமுடியாமல் திணறுகின்றன. போட்டிகள் துவங்கும் ஜூன் மாத துவக்கத்திலேயே பணத்தை வழங்கினால் அரசுப் பள்ளிகள் யாரிடம் கையேந்தாமல் போட்டிகளை நடத்த முடியும். போட்டிகள் நடக்கும் போது உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு கட்டணத்தின் கீழ் பணம் தரவேண்டும். 50 சதவீத தலைமையாசிரியர்கள் இப்பணத்தை தருவதில்லை.
இதனால் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்க முடிவதில்லை. அழைத்துச் செல்ல பணமுமின்றி விளையாட்டையே தவிர்க்கின்றனர். திறமையான மாணவர்களின் எதிர்காலம் வீணாகிறது.
விளையாட்டு துறையை ஊக்கப்படுத்த திறமையான வீரர், வீராங்கனைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கான செலவை அரசே ஏற்க வேண்டும்.