ஐகோர்ட்டில் ஆறு புதிய நீதிபதிகள் பதவியேற்பு !

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட, ஆறு புதிய நீதிபதிகள், நேற்று பதவியேற்றனர். அவர்களுக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளாக, வி.பாரதிதாசன், டி.கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன், பொன்.கலையரசன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.


இவர்களில், நீதிபதி கலையரசன், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக பதவி வகித்தவர்; நீதிபதி கோகுல்தாஸ், மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர்; மற்ற, நான்கு பேரும், வழக்கறிஞர்களாக, 'பிராக்டீஸ்' செய்தவர்கள்.புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான, ஜனாதிபதியின் உத்தரவு, நேற்று முன்தினம் வந்தது.

நேற்று பிற்பகல், உயர் நீதிமன்ற வளாகத்தில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஜனாதிபதியின் நியமன உத்தரவை, பதிவாளர் ஜெனரல் ரவீந்திரன் வாசித்தார். அதை தொடர்ந்து, நீதிபதிகள், ஆறு பேரும், வரிசையாக பதவியேற்று கொண்டனர்.தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி யேற்ற பின், நியமன உத்தரவில், நீதிபதிகள் கையெழுத்திட்டனர். உயர் நீதிமன்றத்தில், ஆறு புதிய நீதிபதிகள் பதவியேற்றதை தொடர்ந்து, 34 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை, 40 ஆக உயர்ந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...