மும்பை - ஆமதாபாத் இடையே, திட்டமிடப்பட்டுள்ள புல்லட் ரயில், ஒரு நாளைக்கு 1.1 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றால் தான், நஷ்டமின்றி இயங்க முடியும்' என, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை - குஜராத்தின் ஆமதாபாத் நகரங்களை இணைக்கும் வகையில், 534 கி.மீ.,
துாரத்துக்கு, புல்லட் ரயில் இயக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ஆகும் செலவில், 80 சதவீத தொகையாக, 97,636 கோடி ரூபாயை, 0.1 சதவீத வட்டியில், ஜப்பான் அரசு கடனாக வழங்குகிறது. இத்திட்டம் தொடர்பாக, ஆமதாபாத்தை சேர்ந்த, ஐ.ஐ.டி., நிறுவனம் ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கை விவரம்:
மும்பை - ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயிலில்ஒருமுறை பயணிக்க, ஒரு பயணிக்கு, 1,500 ரூபாய் வீதம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அச்சூழ்நிலையில், ஒரு நாளைக்கு, 88 ஆயிரம் முதல் 1.1 லட்சம் பயணிகள் பயணித்தால் மட்டுமே, கடன் தொகையை குறித்த நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியும். இதற்காக, ஒரு நாளைக்கு, குறைந்த பட்சம், 100 முறையாவது, ஆமதாபாத் - மும்பை இடையே, புல்லட் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
புல்லட் ரயில் திட்டம் அமலுக்கு வந்து, 16வது ஆண்டுமுதல், ஜப்பான் வழங்கிய கடன் தொகையை திருப்பிச் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளில் கடனை செலுத்த, ஒப்பந்தம் வகை செய்கிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு...
புல்லட் ரயில் திட்டம் மூலம், ரயில்வே துறைக்கு கிடைக்கும் ஒவ்வொரு, 100 ரூபாயிலும், 40 ரூபாய் பராமரிப்பு செலவுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.
மீதமுள்ள தொகை, கடன் தொகையை செலுத்த பயன்படுத்தப்படும். புல்லட் ரயில் திட்டத்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அதிகளவில் பயன்கள் கிடைக்குமென ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.