ஒரே வடிவில் கணக்கு விவ­ரங்கள்: வங்­கிகள் முடிவு !

அனைத்து வங்­கி­களும், வாடிக்­கை­யாளர் மேற்­கொள்ளும் பணப் பரி­வர்த்­தனை விவ­ரங்­களை, ஒரே வடிவில் தொகுக்க, முடிவு செய்­துள்­ளன.
கறுப்பு பணம், சட்ட விரோத பணப் பரி­மாற்றம், நிதி மோசடி உள்­ளிட்ட வழக்­கு­களை, மத்­திய மற்றும் வருவாய் புல­னாய்வு அமைப்­புகள் விசா­ரிக்­கின்­றன. இவ்­வ­ழக்­கு­களில், குற்றம் சாட்­டப்­பட்­
டோரின் பணப் பரி­வர்த்­தனை விவ­ரங்­களை, ஒவ்­வொரு வங்­கியும் வெவ்­வேறு வடி­வங்­களில் வழங்­கு­கின்­றன. இதனால், ஒரு வழக்கில் தொடர்­புள்ள பல வங்­கி­களின் கணக்கு பரி­வர்த்­தனை விவ­ரங்­களை புரிந்து கொள்­ளவே, புல­னாய்வு அமைப்­பி­ன­ருக்கு சிர­ம­மாக உள்­ளது. மேலும், கால விரையம், மனித உழைப்பு வீணா­வ­துடன், குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­வதும் தாம­த­மா­கி­றது. இப்­பி­ரச்­னைக்கு தீர்­வாக, ‘அனைத்து வங்­கி­களும், வாடிக்­கை­யா­ளர்­களின் பணப் பரி­வர்த்­தனை விவ­ரங்­களை, ஒரே வடிவில் தொகுத்­த­ளிக்க வேண்டும்’ என, புல­னாய்வு அமைப்­புகள் கோரி வரு­கின்­றன.
இது தொடர்­பாக, மத்­திய வருவாய் துறை செயலர், ஹஸ்முக் அதியா தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில், ‘தேசிய மின்­னணு நிதி பரி­மாற்றம், இன்­டர்நெட் வங்கி பரி­வர்த்­தனை வங்­கிகள் இடை­யி­லான பணப் பரி­மாற்ற விவ­ரங்கள் அனைத்தும், புதி­தாக, ஒரே வடிவின் கீழ் கொண்டு வர, இந்­திய வங்­கிகள் முடிவு செய்­துள்­ளன’ என, ரிசர்வ் வங்கி பிர­தி­நிதி தெரி­வித்தார். இதன் மூலம், நிதி மோசடி, வங்கி முறை­கேடு, கறுப்பு பணம், சட்ட விரோத பணப் பரி­மாற்றம் உள்­ளிட்ட வழக்­கு­களில், புல­னாய்வு அமைப்­புகள், விரைந்து செயல்­படும் சூழல் உரு­வாகும் என, தெரி­கி­றது.
* கடந்த, 2015ல், ஏப்ரல் முதல் டிசம்பர் வரை­யி­லான ஒன்­பது மாதங்­களில், வங்கி மோசடி தொடர்பாக, 11 ஆயி­ரத்து, 997 வழக்­குகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...