மேற்கு வங்கம், அசாமில் முதற்கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது !

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலின், முதல் கட்ட ஓட்டுப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் துவங்கியது.
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கும், மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு, ஆறு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில், முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. மொத்தமுள்ள, 294 தொகுதிகளில்,
நக்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில், இன்று மற்றும் ஏப்., 11 என, இரு தேதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இன்று, ஓட்டுப்பதிவு நடக்க உள்ள, 18 தொகுதிகளில், 133 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், நக்சல் பாதிப்பு அதிகமுள்ள, 13 தொகுதிகளில், பாதுகாப்பு கருதி, மாலை, 4:00 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிந்து விடும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மீதமுள்ள, ஐந்து தொகுதிகளிலும், மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும்.



மேற்கு வங்கத்தில், 34 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, 2011ல் முதல்வராக பொறுப்பேற்றார், மம்தா பானர்ஜி. இந்த தேர்தலில், திரிணமுல் காங்., தனித்து போட்டியிடுகிறது. மார்க்சிஸ்டும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இது தவிர, மாநிலத்தில் கால் பதிக்கும் திட்டத்துடன், பா.ஜ.,வும் களமிறங்கியுள்ளது.



40 லட்சம் வாக்காளர்கள்:

இன்று, தேர்தல் நடக்கும், 18 தொகுதிகளில், 40 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இவர்களில், 20.47 லட்சம் பேர் பெண்கள். ஓட்டுப்பதிவை கண்காணிக்க, ரகசிய கேமரா, இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில், மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; இரு ஹெலிகாப்டர்களும், ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...