எம்.பி.,க்கள் சம்பளத்தை 100 சதவீதம் உயர்த்த பரிந்துரை !!!

பார்லி., உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் இதர சலுகை தொகைகளை 100 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை தொடர்பான மசோதா அடுத்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


தற்போது மாதம் ரூ.50,000 ஆக உள்ள எம்.பி.,க்களின் சம்பளத்தை ரூ.1 லட்சமாகவும், ரூ.45,000 ஆக இருக்கும் சலுகை தொகையை ரூ.90,000 ஆக உயர்த்தி வழங்கவும் அரசுக்கு பார்லி., குழு பரிந்துரை அளித்துள்ளது. பார்லி., குழுவின் பரிந்துரை ஏற்கப்படும் பட்சத்தில் எம்.பி.,க்களின் நிவாரண நிதி தொகை ரூ.1,40,000 லிருந்து ரூ.2,80,000 ஆக உயரும். எம்.பி.,க்களின் சம்பளம் கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.,வின் யோகி ஆதித்யானந்த் தலைமையிலான குழு, எம்.பி.,க்களின் ஓய்வூதியத்தை 75 சதவீதம் உயர்த்தும்படி கேட்டுள்ளது. இந்த பரிந்துரை தொடர்பான மசோதா பார்லி.,யில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, கருத்து கேட்கப்பட உள்ளது. எம்.பி.,க்களின் "நன்னடத்தை" அடிப்படையில் இந்த சம்பள மற்றும் சலுகை தொகை உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவகாரத்தை ராஜ்யசபாவில் எழுப்பிய சமாஜ்வாதி கட்சி எம்.பி., நரேஷ் அகர்வால், எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்த பார்லி., குழு தாக்கல் செய்த அறிக்கையை, மீடியாக்களின் அழுத்தம் காரணமாக அரசு மறைத்துள்ளது. பலரும் இதை விரும்பினாலும். அவையில் பேச பலரும் தயங்குகிறார்கள் என்றார்.

அகர்வால் கருத்தை ஆதரித்து பேசிய எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், எம்பி.,களின் "நன்னடத்தை" காரணமாக இந்த உயர்வு பரிந்துரைக்கப்படுவதாக கூறுவதையும், பணவீக்கம் என்பது எம்பி.,களையும் பாதிக்கும் என்பதையும் வரவேற்பதாக கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...