எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களுக்கு சிறப்பு ரயில்களிலும் சலுகை !!!

'சிறப்பு மற்றும் சுவிதா ரயில்களில், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், தங்களுக்கான வி.ஐ.பி., கோட்டாவில் பயணிக்கலாம்' என, இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, வி.ஐ.பி., கோட்டாவில், நாடு முழுவதும் ரயிலில் பயணிக்கும் சலுகை
வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சிறப்பு மற்றும் சுவிதா ரயில்களில், இந்த சலுகை வழங்கப்படவில்லை. அவர்கள் முழு கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர்.



இந்நிலையில், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், அவர்களுக்கான பாஸ் அல்லது கூப்பனில், சிறப்பு மற்றும் சுவிதா ரயில்களில் பயணிக்க அனுமதிக்கும்படி, இந்திய
ரயில்வேயின், பயணிகள் வர்த்தக பிரிவு இயக்குனர் விக்ரம் சிங், அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

எம்.பி.,க்களின் பயண கட்டணத்தை பார்லிமென்டும், எம்.எல்.ஏ.,க்களின் பயண கட்டணத்தை சம்பந்தப்பட்ட சட்டசபையும் செலுத்தும் என்பதால், ரயில்வேக்கு இழப்பு ஏற்படாது என்று ரயில்வே வட்டாரத்தில் கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...