49 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ணக்கோரி மனு....

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில், தி.மு.க., சார்பில் அப்பாவு, அ.தி.மு.க., சார்பில் இன்பதுரை போட்டியிட்டனர். 49
ஓட்டுகள் வித்தியாசத்தில், இன்பதுரை வெற்றி பெற்றார்.இதையடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், தி.மு.க., வேட்பாளர் அப்பாவு அளித்த மனு:

ஓட்டு எண்ணிக்கையின் போது, எனக்கு சாதகமாக விழுந்த தபால் ஓட்டுகளை புறக்கணித்தது குறித்து, தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தேன். எனக்கு ஆதரவாக விழுந்த, 300 தபால் ஓட்டுகளை, சட்டவிரோதமாக நிராகரித்ததை ஆட்சேபித்தேன்.
'மீண்டும் ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும். குறிப்பாக, தபால் ஓட்டுகளை எண்ண வேண்டும்' எனக்கோரியும், அ.தி.மு.க., வேட்பாளருக்கு சாதகமான முடிவை, அவசரகதியில் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
மே, 21ல், மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, விரிவான மனு அனுப்பினேன். தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ணும்படி கோரினேன். ஆனால், தலைமை தேர்தல் அதிகாரி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தல் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட கையேட்டில் கூறியுள்ளபடி, தபால் ஓட்டுகளின் எண்ணிக்கையை விட, வெற்றிக்கான ஓட்டு வித்தியாசம் குறைவாக இருந்தால், அனைத்து தபால் ஓட்டுகளையும் மீண்டும் சரி பார்க்க வேண்டும்.
செல்லாது என நிராகரிக்கப்பட்ட தபால் ஓட்டுகளையும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் சாதகமாக விழுந்த தபால் ஓட்டுகளையும், தேர்தல் பார்வையாளர் மற்றும் தேர்தல் அதிகாரி முன்னிலையில், மீண்டும் சரி பார்க்க வேண்டும்.
எனவே, எம்.எல்.ஏ.,வாக இன்பதுரை பதவியேற்பதற்கு முன், தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ணும்படி, தொகுதி தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட வேண்டும். தபால் ஓட்டுகளை எண்ணி, இறுதி முடிவு அறிவிக்கும் வரை, எம்.எல்.ஏ.,வாக இன்பதுரை பதவியேற்க, சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...