ரூ.800 கோடி சொத்துகள் பறிமுதல்: அமைச்சரெல்லாம் இல்லைங்க.. போக்குவரத்து அதிகாரிதான்..

ஆந்திர மாநில போக்குவரத்துத் துறையின் துணை ஆணையர் மோகன் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.800 கோடி மதிப்புள்ள பணம், நகை, சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் மோகனுக்கு சொந்தமன 9 இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
வியாழக்கிழமை காலை தொடங்கிய சோதனை, தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது. சுமார் ரூ.100 கோடி முதல் 120 கோடி ரூபாய் வரையிலான சொத்து ஆவணங்கள், விலை உயர்ந்த ரத்தினங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


வருமானத்துக்கு அதிகமாக ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்த மோகன், விஜயவாடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுவரை பறிமுதல் செய்த சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.800 கோடி இருக்கும் என்றும், ஏராளமான வங்கி லாக்கர்கள் இன்னும் திறந்துபார்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...