தேர்தல் கமிஷன் 'பூத் சிலிப்' முழுமையாக வழங்கப்படவில்லை,' என, வாக்காளர்கள் புகார் தெரிவித்தனர்.
இம்மாவட்டத்தில் 86 சதவீதம் பூத்சிலிப் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல தொகுதிகளில் 'பூத்சிலிப்' வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்
வீடுகளுக்கு சென்று வழங்கவில்லை. அவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு, அலைபேசியில் தொடர்பு கொண்டு 'பூத்சிலிப்' வாங்கிச் செல்லும்படி கூறுகின்றனர். இதனால் பல இடங்களில் வாக்காளர்களுக்கு 'பூத்சிலிப்' சென்றடையவில்லை.
தாமதமாக தொடர்பு கொள்ளும் வாக்காளர்களிடம் ஊழியர்கள், 'தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் 'பூத் சிலிப்' வாங்கி கொள்ளுங்கள்,' என, தெரிவிப்பதால் அதிருப்தியடைந்துள்ளனர். குறிப்பாக இந்த குற்றச்சாட்டுகள் மதுரை மேற்கு தொகுதியில் அதிகம் உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: 'பூத் சிலிப்' அனைவருக்கும் வழங்க வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருவேளை கிடைக்கவில்லை எனில் வாக்காளர் அட்டையில் உள்ள எண்ணை 1950 என்ற எஸ்.எம்.எஸ்.,சில் அனுப்பி விபரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். 'பூத்சிலிப்' முறையாக வழங்காத ஊழியர்களிடம் விளக்கம் கேட்கப்படும், என்றனர்.