இன்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது. எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் அல்லது தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. பெற்றோர் விழிப்போடு இருக்க வேண்டும்.
மாணவர்களை திட்ட வேண்டாம்; அது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
முடிந்த அளவு அவர்களை தேற்றுங்கள்; முடியாவிட்டால், '104'ஐ அழையுங்கள்; வாழ்வில் வெற்றி பெறுவதற்கான பல வாய்ப்புகள் குறித்து, ஆலோசனைகளை தருகிறோம். கடந்த ஆண்டில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான அன்று, ஆலோசனை கேட்டு, 10 ஆயிரம் அழைப்புகள் வந்தன. இதை கருத்தில் கொண்டு, இந்த முறை, அதிக அளவில் உளவியல் ஆலோசகர்களை நியமித்துள்ளோம். மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் ஆலோசனை பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.