ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு, மே, 23க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை, பலன் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக, அரசியல் கட்சிகள், மாறி மாறி குற்றச்சாட்டுக்களைக் கூறி வந்தன. அதற்கெல்லாம் உச்சமாக, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில், 100 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது, குற்றச்சாட்டுக்களை உறுதி செய்யும் வகையில் அமைந்தது.
ஓட்டுப்பதிவுக்கு ஒரு நாள் இருந்த நிலையில், அதிக பணம் பட்டுவாடா நடந்துள்ளதாகக் கூறி, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல், 23க்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன் முடிவுகள், மே, 25க்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் இரவில், அதாவது, நேற்று முன்தினம் இரவு, இதே பணபட்டுவாடா புகார் காரணமாக, தஞ்சாவூர் தொகுதியின் தேர்தலும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிக்கும், மே, 23ல் தேர்தல் என்றும், 25ல் முடிவுகள் வெளியாகும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை பலன் தருமா என, அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இவ்விரு தொகுதிகளுக்கு மட்டும், ஒரு வாரம் தள்ளி
ஓட்டுப்பதிவு நடத்துவது, வாக்காளர்கள் மனதில் பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தி விடாது; இன்னொரு, 'ரவுண்ட்' பணம் பட்டுவாடாவுக்கு, அரசியல் கட்சிகள் தயங்காது என்று, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதேசமயம், மூன்று மாதமோ, ஆறு மாதமோ கழித்து, இந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தினாலும், இப்போது போலவே பணம் பட்டுவாடா நடத்தப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும், தற்போது பெரும்பான்மை தொகுதிகளைப் பிடித்து, ஆட்சியமைக்கும் கட்சி, அதிகார துஷ்பிரயோகம் செய்யாது என்றும் கூற முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இவ்விரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை, தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று, சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதுபோன்ற நடவடிக்கைகள் வேண்டுமானால், பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர்.