மாநில அளவிலான நுழைவு தேர்வுசுப்ரீம் கோர்ட்டில் மாநிலங்கள் வாதம் !

மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்க, இந்த ஆண்டு மாநில அளவிலான நுழைவுத் தேர்வையே நடத்த அனுமதிக்க வேண்டும் என, பல்வேறு மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் கடுமையாக வாதிட்டன.


மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்க, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட், தீர்ப்பளித்தது. இந்த நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மே, 1 மற்றும் ஜூலை, 24ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நுழைவுத் தேர்வு நடத்தவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு மாநில அளவிலான நுழைவுத் தேர்வையே இந்த ஆண்டு நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என, பல்வேறு மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்கள், நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, சிவ கீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, பல்வேறு மாநிலங்கள் சார்பிலும், தனியார் மருத்துவக் கல்லுாரிகள் சார்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், மாநில அளவிலான நுழைவுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், ஜூலை, 24ல் நடக்க உள்ள தேசிய பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு மாநில அளவிலான நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என, கடுமையாக வாதிட்டனர். வழக்கின் விசாரணை, 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...