தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு தேதி நாளை அறிவிக்கப்படுமா?

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வாதம் நாளை முடிவடைந்ததும், தீர்ப்பு தேதியை நீதிபதிகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து
கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிப்ரவரி 23ம் தேதி முதல் கர்நாடக அரசின் இறுதி வாதம் நடந்து வருகிறது. கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 4 நாட்களும், அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 5 நாட்களும் வாதத்தை முன்வைத்தனர். தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் 4 நாட்கள் வாதிட்டார்.

கடந்த மாதம் சசிகலா தரப்பு வாதம் நிறைவடைந்ததை அடுத்து வழக்கு விசாரணை மே 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நேற்று மீண்டும் வழக்கு விசாரணை நடந்த போது கர்நாடக தரப்பில் ஆச்சாரியா பதில் வாதத்தை முன்வைத்தார். இன்றும் ஆச்சார்யாவின் வாதம் தொடர உள்ளது. அதன் பிறகு கர்நாடக தரப்பு பதில் வாதம் முன் வைக்கப்படும் என ஆச்சார்யா நேற்று கூறி உள்ளார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிலைக்காது, சொத்து குவிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என ஆச்சாரியா தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக தரப்பு வாதம் நாளை முடிவடைந்ததும் இவ்வழக்கின் தீர்ப்பு தேதியை நீதிபதிகள் அறிவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...