சட்டசபை தேர்தல் நாளன்று, தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதற்காக, முக்கிய வழித்தடங்களில், காற்றாடி பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எண்ணுார், வட சென்னை, வல்லூர்
அனல் மின் நிலையங்களுக்கு அருகே, பலர் காற்றாடி பறக்க விடுகின்றனர். காற்றாடி நூல், மின் கோபுரம் மேல் செல்லும் மின் கம்பியில் பட்டு, அவ்வப்போது பழுது ஏற்படுகிறது. இதனால், மின்சாரம் கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு, மின் தடை ஏற்படுகிறது.இதையடுத்து, மே, 16ல் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க, முக்கிய வழித்தடங்களில் காற்றாடி பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2009 லோக்சபா தேர்தலின் போது, ஓட்டுப்பதிவிற்கு முந்தைய நாள், திருவள்ளூர் மாவட்டம், எண்ணுாரில், காற்றாடி பறக்க விட்ட போது, மாஞ்சா கயிறு, மின் வழித்தடத்தில் பட்டு மின்கோபுரம் பழுதானது. இதனால், தேர்தலுக்கு முந்தைய நாள், சென்னையின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.அப்போது, முதல் தேர்தலின் போது, காற்றாடி பறக்க தடை விதிக்கப்படுகிறது. அதேபோல், தற்போதும் காற்றாடி பறப்பதை தடுக்க, போலீஸ் உதவியுடன் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.