வாக்குப்பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கானப் பதிவு இது.
நீங்கள் 3 பயிற்சிக்கூட்டங்களிலே கலந்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்கானப் பணிகளைத் தமிழில் வரிசைக்கிரமமாக எளிமைப்படுத்தித் தருகிறேன்.
இதன்படி, உங்கள் பணிகளை வரிசையாக மேற்கொண்டால் பதட்டமின்றியும் வெற்றிகரமாகவும் அமையும்.
1) உங்களுக்கென்று தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகள் இருந்தாலும், அதை மறந்து ஒரு தேர்தல் அலுவலராக நடுநிலையாக நடந்து கொள்ளுங்கள். நீங்கள் நேர்மையாகப் பணியாற்றுவது மிக முக்கியம்.. அதேபோல் நீங்கள் நேர்மையாகத்தான் நடந்து கொள்கிறீர்கள் என்ற தோற்றம் பிறர் பார்வையில் எழும்புவது அதைவிட மிக முக்கியம்.
2) இன்று உங்களுக்கான வாக்குப்பதிவு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட உடன், உங்கள் சக குழுவினரை அடையாளம் கண்டு கொண்டு, அந்த நொடியிலிருந்து ஒரே குழுவாக இயங்க ஆரம்பியுங்கள்.
3) இன்று பிற்பகல் 1 மணிக்குள் முக மலர்ச்சியுடன் வாக்குப்பதிவு மையத்தைச் சென்றடைந்து, உங்கள் தொலைபேசி எண்ணிலிருந்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கான எண்ணிற்கு, AUTH எனச் செய்தி அனுப்பி, உங்கள் தொலைபேசி எண்ணைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
4) இன்று 2 மணிக்கு எல்லா அலுவலர்களும் உங்கள் மையத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்து கொண்டு, RCD என செய்தி அனுப்புங்கள்.
5) உங்கள் மையத்திற்குள் அரசியல் அடையாளங்கள், தலைவர்களின் படங்கள், வாசகங்கள் இல்லாமல் இருக்கிறதா என்பதைப் பாருங்கள்.
6) மையத்திலிருந்து 100 அடி மற்றும் 200 அடித் தொலைவில் அடையாளம் குறிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள்.
7) சக அலுவலர்களுடன் இணைந்து வாக்குப்பதிவு மையத்தை வாக்காளர்கள் எளிதாக வந்து செல்லும் வண்ணம் வடிவமையுங்கள். அலுவலர்கள், ஏஜெண்டுகள் அமர வேண்டிய இடத்தை முடிவு செய்யுங்கள்.
(படம்)
8) வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பெற்றுக் கொண்டு, அதனை இயக்கிப் பார்த்து சரி பாருங்கள். பேட்டரியை On செய்தும் Off செய்தும் இயக்கிப் பாருங்கள்.
உங்களுக்கான மெட்டல் சீலைத் தனியாக எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
9) உங்கள் மையத்திற்கான ஏஜெண்டுகளுக்கான நியமனக்கடிதம் வந்திருக்கிறதா என்பதைச் சரிபார்த்து, அவர்களுக்கான அடையாள அட்டைகளைத் தயார் செய்து, இரண்டையும் ஒரு கவரிலிட்டு தனியாக வையுங்கள்.
10) அடையாளமிடப்பட்ட வாக்காளர் பட்டியல், சரிபார்ப்பு வாக்காளர்பட்டியல் பெறப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்த்து எத்தனை வாக்காளர்கள்? ஆண்? பெண்? எத்தனை பேர் என்பதை தனியாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
Tender votes (கள்ள வாக்கு)
Challenged votes (ஐயத்திற்குரிய வாக்கு) என்பது பற்றி தெளிவாகிக் கொள்ளுங்கள்.
11) தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள போஸ்டர்களை உரிய இடத்தில் ஒட்டி வையுங்கள்.
12) தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அலுவலரை மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கலாம். அவர்களும் வாக்காளர்கள் எந்தக்கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.
13) நாளை காலை 6 மணிக்கே ஆயத்தமாகுங்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார் செய்து, ஏஜெண்டுகளை உள்ளே அனுமதித்து, அடையாள வில்லை அவர்களுக்கு வழங்கி, 6.30 மணிக்குள் மாதிரி வாக்குப்பதிவை நடத்திக் காட்டுங்கள்.
Clear
Ballot
Close
Total
Result
Clear
என்ற வரிசையில் இயந்திரத்தை இயக்குங்கள்.
Mock poll certificate யை வழங்குங்கள்.
எந்திரத்தை சீல் செய்யுங்கள்.
Green seal
Special tag
Strip seal
Address tag
எல்லாவற்றிலும் நீங்களும் கையெழுத்திட்டு, முகவர்களிடமும் கையெழுத்து பெற்று அதன்பின்னர் பொருத்துங்கள்.
6.30 மணிக்கு MPC என SMS அனுப்புங்கள்.
14) சரியாக 7 மணிக்கு வாக்காளர் ரகசியம் பேணுவது சார்ந்த உறுதிமொழி எடுத்து வாக்குப்பதிவைத் துவக்குங்கள்.
15) STD என 7 மணிக்கு SMS அனுப்புங்கள்.
அதன்பிறகு கீழ்க்கண்ட நேரங்களில் எத்தனை பேர் வாக்களித்திருக்கிறார்கள் என SMS அனுப்புங்கள்.
9 மணி : V9 _ _ _
11மணி: V11 _ _ _
1 மணி : V1 _ _ _
3 மணி : V3 _ _ _
3.30. : V3A _ _ _
4. : V4. _ _ _
4.30. : V4A. _ _ _
5. : V5 _ _ _
5.30. : V5A _ _ _
6. : V6 _ _ _
வாக்குப்பதிவை முடிக்க வேண்டியநேரம் இது.
வரிசையில் வாக்காளர்கள் நின்றால் கடைசி நபரிடமிருந்து வரிசை எண்ணிடப்பட்ட டோக்கனை வழங்குங்கள். அவர்களை மட்டும் வாக்களிக்க அனுமதித்து விட்டு வாக்குப்பதிவை நிறுத்துங்கள்.
இயந்திரத்தில் CLOSE பட்டனை அழுத்த மறந்துவிடாதீர்கள். முன்னதாக TOTAL சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
16) முதியோர்கள், கைக்குழந்தை வைத்திருக்கிறவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து வாக்களிக்க வசதி செய்து கொடுங்கள்.
17) BATTERY யை OFF செய்யுங்கள். சீல் வையுங்கள். இணைப்புகளைத் துண்டியுங்கள்.
18) Agent களுக்கு வாக்குப்பதிவு கணக்குச் சீட்டு வழங்குங்கள்.
19) எல்லா நிகழ்வுகளையும் PRO DIARYல் அவ்வப்பொழுது பதிவு செய்து வாருங்கள்.
6.30 மணிக்கு கீழ்க்கண்ட SMSகளை அனுப்புங்கள்.
VM _ _ _
VF _ _ _
VT _ _ _
20) எல்லாப் படிவங்களையும் தயார் செய்துவிட்டு, மண்டல அலுவலர் வந்ததும் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு, ரசீது பெற்றுக்கொள்ளுங்கள். (மெட்டல் சீல் மிக முக்கியம்)
அவ்வளவுதான்..
Agent களுக்கு நன்றி சொல்லி கை குலுக்கி சந்தோஷமாய் வெளியே வாருங்கள்.
All the best..