தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிட்டதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு திமுக-அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திமுக-அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில்
வாக்காளர்களைக் கவரும் வகையில், பல்வேறு இலவசங்களை அளிப்பதாக அறிவிப்புகள் வெளியிட்டுள்ளன. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் படி இலவசங்களுக்கான வருவாய் நிதி ஆதாரத்தைத் தெரிவிக்க வேண்டும். இருகட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் அந்தத் தகவல் குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து, இரு கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் அந்தக் கட்சிகள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.