ஓட்டுப்பதிவின் போது, மின் தடை ஏற்படாமல் இருக்க, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், ஒரு ஊழியரை, தமிழ்நாடு மின் வாரியம் நியமித்து உள்ளது.தமிழகத்தில், இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கு, தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், ஒரு ஊழியரை, மின்
வாரியம் நியமித்து உள்ளது.இவர்கள், 'இன்று காலை, 6:00 மணி முதல் ஓட்டுப்பதிவு முடிந்து, இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் வரை, ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட இடத்தை விட்டு செல்ல கூடாது' என, மின் வாரியம் உத்தரவிட்டுஉள்ளது.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஓட்டுச்சாவடிக்கு மின்சாரம் வரும், 'டிரான்ஸ்பார்மர், பில்லர் பாக்ஸ்' போன்ற மின் சாதனங்களை, ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எந்த ஓட்டுச்சாவடியிலாவது மின் தடை ஏற்பட்டால், அங்கு பணியில் உள்ள செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மீது, 'சஸ்பெண்ட்' உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.