தமிழகத்தில் இன்று நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்காக, இம்மாதம், 13ம் தேதி, 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், 820 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
எனினும், நேற்று நள்ளிரவு வரை, சென்னை, கோயம்பேடு பஸ் நிலையத்தில், சொந்த ஊருக்குச்
செல்லும் வாக்காளர்களின் கூட்டம் அலை மோதியது. பெரும்பாலான ஓட்டுனர்கள், நடத்துனர்கள், ஓட்டுப் போடுவதற்காக சொந்த ஊர் சென்றதால், ஏராளமானோர் ஓட்டுப் போட முடியாமல் போனது.
போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்தல் நாளன்று சிறப்பு பஸ்களை இயக்குவதற்காக, பணியில் இருக்கும் ஓட்டுனர், நடத்துனர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களுக்கு மட்டும் தபால் ஓட்டு வசதி அளிக்குமாறு, தேர்தல் ஆணையத்திடம் முன் கூட்டியே வேண்டுகோள் வைத்திருந்தோம். இருப்பினும் உரிய அனுமதி அளிக்கவில்லை. இதனால், பஸ்கள் இயக்கத்தில் சிக்கல் ஏற்பட்டது.
ஒவ்வொரு பஸ்சுக்கும் ஓட்டுனர், நடத்துனர் என, இரண்டு பேருக்கு தபால் ஓட்டு வாய்ப்பு அளித்து இருந்தால், பஸ் இயக்கத்தில் எந்த சிரமும் இருந்து இருக்காது. அதன் மூலம் ஏராளமான வாக்காளர்கள் ஜனநாயக கடமை ஆற்றியிருப்பர். ஆனால், தேர்தல் ஆணையம் இதை பரிசீலிக்காததால் பலரும் தங்கள் ஓட்டுரிமையை இழக்க நேர்ந்துள்ளது.