தபால் ஓட்டுக்களில் வாக்காளர் தங்களை அடையாளப்படுத்தும் விதமாக குறியீடு செய்திருந்தால்,அவற்றை நிராகரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு அளிக்கப்படுகிறது. தபால் ஓட்டில் குறிப்பிட்ட முறையில் தான் அடையாள
குறியீடு பதிய வேண்டுமென, வரையறை கிடையாது. எந்தவொரு குறியீடாக இருந்தாலும் தெளிவாக சந்தேகமின்றி இருக்க வேண்டும்.
ஒரே சின்னத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை குறியீடு செய்திருந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். தபால் ஓட்டுச் சீட்டில் எந்த குறியீடும்
இல்லாதிருத்தல்,ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர் சின்னங்களில் ஓட்டளித்தல், போலியான ஓட்டுச்சீட்டு, சிதைக்கப்பட்ட ஓட்டுச்சீட்டு, உறைக்குள் வைக்காத ஓட்டுச்சீட்டு நிராகரிக்கப்படும்.
எந்த வேட்பாளரின் சின்னத்திற்கு ஓட்டளிக்கப்பட்டது என, சந்தேகம் ஏற்பட்டால்,வாக்காளர் தங்களை அடையாளப்படுத்தும் விதமாக குறியீடு செய்திருந்தால் அவற்றை நிராகரிக்கலாம் என,தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.