வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையால், சென்னையில், நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்' என, தனியார் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து, டில்லியை மையமாகக் கொண்டு செயல்படும், 'ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை மையம்,
நேற்று வெளியிட்ட அறிக்கை:வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலை அடுத்த, 24 மணி நேரத்தில் தீவிரமடையும். நாளை, காற்று அழுத்த தாழ்வு நிலை, காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால், நாளை முதல், நான்கு நாட்களுக்கு,
சென்னையில் மிதமானது முதல், கன மழை வரை பெய்யும்; இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உண்டு.சென்னை மற்றும் கடலோர பகுதிகளில், மழையின் போது பலத்த காற்று வீசலாம். குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம், சென்னையை கடந்து வடக்கு நோக்கி செல்கிறது. அதன்பின், மழை குறையும்.
இந்த, நான்கு நாட்கள், கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகின்றனர். ஒன்றரை மாதமாக, சென்னையில் நிலவி வந்த கடும் கோடையும், வறண்ட வானிலையும் இதன் மூலம் மாறும். மே, 19ம் தேதிக்குப் பின், சென்னையில் மீண்டும் கோடையின் தாக்கம் அதிகரிக்கும், என
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.