வாக்குச்சாவடி அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு !

மாவட்டத்தில் உள்ள 3,770 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் குலுக்கல் முறையில் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
 இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
 திங்கள்கிழமை (மே 16) நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, சென்னை
மாவட்டத்துக்குள்பட்ட 3,770 வாக்குச்சாவடிகளுக்கும் 3-ஆவது கட்டமாக குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி ரிப்பன் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
 தேர்வு செய்யப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை பணி ஆணை வழங்கப்பட்டு, அவரவர்களுக்கு உரிய வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
 இதனைத் தொடர்ந்து மண்டல அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கான தளவாட பொருள்கள் ஆகியவற்றை காவல்துறை பாதுகாப்போடு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சென்று ஒப்படைப்பார்கள்.
 காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை...: அதன் பிறகு, வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கவனிப்பார்கள். திங்கள்கிழமை காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிப்பார்கள். அதையடுத்து அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன், மத்திய பார்வையாளர்கள், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், ஒருங்கிணைப்புக் குழு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...