இன்றைய 14.06.2016 முக்கிய செய்திகள்....!

*🌹🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*

*🌟14.06.2016 * செவ்வாய்🌟*

*🙏🏻🙏🏻தலைப்பு செய்திகள்🙏🏻🙏🏻*

*⭕மாநில செய்திகள்⭕*

✳ பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்; கோவில்களில் திருட்டு போனால் அதிகாரிகளிடம் இழப்பீடு வசூலிக்கப்படும்; இந்து அறநிலையத்துறை ஆணையர் எச்சரிக்கை

✳ தமிழ்நாட்டில் இடம் கிடையாது: ‘சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் ஓட, ஓட விரட்டுவோம்’ திருமண விழாவில் கருணாநிதி பேச்சு

✳ தே.மு.தி.க. வாக்கு வங்கி 2.4 சதவீதமாக குறைந்தது ஏன்? நிர்வாகிகளுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை


✳ மருத்துவ கல்வி நுழைவு தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அனைத்துக் கட்சி ஆதரவுடன் தமிழக சட்டசபையில் தீர்மானம்; மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

✳ ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் குறைகளைத் தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு: செவ்வாய்க்கிழமை தோறும் தனி அலுவலர் மனு வாங்குவார்; ஜெயலலிதா அறிவிப்பு

✳ சென்னையில் 18-ந் தேதி அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு

✳சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது; தலைமை நீதிபதி மீண்டும் உறுதி

✳ சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றம் தொடருவதால் மக்கள் பீதி; ராட்சத அலையில் குடிசைகள் இழுத்துச் செல்லப்பட்டன

✳ போதிய மாணவர்கள் இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலை

✳ கோவை அருகே அட்டகாசம் செய்யும் காட்டு யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு; 4 கும்கி யானைகளும் வரவழைப்பு

✳ மரங்களில் விளம்பரம் செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

✳ காரைக்குடி, ராமேஸ்வரம்-திருச்சி பயணிகள் ரெயில் நார்தாமலை ரெயில்நிலையத்தில் நாளை முதல் நிற்காது

✳ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை இளங்கோவன் பேட்டி

*⭕தேசிய செய்திகள்⭕*

✡ குண்டர்கள் ஆட்சியால் வளர்ச்சி பின்தங்கி விட்டது உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு வாய்ப்பு அளியுங்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்

✡ ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே போர் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது விமானி உயிர் தப்பினார்

✡ ‘உத்தா பஞ்சாப்’ பட விவகாரம் சினிமா தணிக்கை குழுவுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் ‘வயதான பாட்டியை போல் செயல் படாதீர்கள்’ என அறிவுரை

✡ ‘‘பா.ஜனதா தொண்டர்களிடம் இருக்க வேண்டிய 7 குணநலன்கள்’’ தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

✡ டெல்லி மேல்–சபை எம்.பி. தேர்தல் பிரச்சினை: அரியானா தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப தேர்தல் கமிஷன் உத்தரவு காங்கிரஸ் புகார் மீது நடவடிக்கை

✡ ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்த பாசுமதி அரிசி ஏற்றுமதி ஊழல் குறித்து அமலாக்கத்துறை விசாரணை

✡ 21 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதாய பதவி: டெல்லி அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி அனுமதி மறுப்பு

✡ கும்பமேளா விழாவில் தாக்குதல் நடத்த சதி: ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 5 பேருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் மறுப்பு

✡ அரசு பஸ்சை சோதனை செய்தபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை அப்பாவி பெண் பயணியும் பலி

✡வெளிநாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்ய இந்திய ரப்பர் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு

✡ கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்: சமாஜ்வாடி கட்சி நடவடிக்கை

✡ நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் போதைப்பொருள் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவோம் ராகுல்காந்தி சொல்கிறார்

✡ மோடி உங்களை இந்திய துணை ஜனாதிபதியாக்க போவதில்லை: ஜங்கை சாடிய கெஜ்ரிவால்

✡ அரியானாவில் மாநிலங்களவை தேர்தலை ரத்துசெய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

✡ சந்திரசேகர் ஆசாத் சிலைக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் அஞ்சலி

✡ கைரானாவில் மக்கள் வெளியேறிய விவகாரம்: சமாஜ்வாடி அரசுக்கு வெட்கமே கிடையாது மேனகா காந்தி கடும் விமர்சனம்

*🌹🌹More education news @ www.sstaweb.com🌹🌹*

*⭕உலகச் செய்திகள்⭕*

🌍 அமெரிக்க இரவு விடுதியில் 50 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

🌍சிறுபான்மையினர் கொலை: வங்காளதேசத்தில் 119 பேர் கைது

🌍 சிரியாவில் வான் தாக்குதலில் சிறுவர்கள் உள்பட 21 பேர் சாவு

🌍 ஓமன் நாட்டில் இந்தியர் மாயம் கடத்தப்பட்டு இருக்கலாம் என உறவினர்கள் அச்சம்

🌍 சீனாவுக்கு 'கிளவுட் நெட்வொர்க்'கை உருவாக்கிக் கொடுக்கிறது நோக்கியா; ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது

🌍 ஆர்லாண்டோ துப்பாக்கி சூடு வெளிநாட்டில் இருந்து இயக்கப்பட்டதாக தெளிவான ஆதாரமில்லை - ஒபாமா

🌍 இனி அமெரிக்காவிடம் எப்-16 போர் விமானங்களை கேட்க போவதில்லை; பாகிஸ்தான் அறிவிப்பு

🌍 அமெரிக்க துப்பாக்கி சூடு நடத்தியவர் மன நிலை பாதிப்பு உள்ளவர் முன்னாள் மனைவி சொல்கிறார்

🌍 அணு விநியோக குழுவில் இடம்: இந்தியாவை விட எங்களின் நம்பகத்தன்மை வலுவானது, பாகிஸ்தான் சொல்கிறது

*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏 ஜிம்பாப்வேக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி எளிதில் வெற்றி தொடரையும் கைப்பற்றியது

🏏 3 நாடுகள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு எலும்பு முறிவு எஞ்சிய போட்டியில் ஆடமாட்டார்

🏏 நடுவரின் முடிவுக்கு நூதன முறையில் இலங்கை அணியினர் எதிர்ப்பு

⚽ ஐரோப்பிய கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது ஸ்பெயின் அணி

⚽ கோபா அமெரிக்கா கால்பந்து பெரு அணியிடம் பிரேசில் அதிர்ச்சி தோல்வி கால் இறுதி வாய்ப்பை இழந்தது

🏑 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி பெல்ஜியம் அணியிடம் இந்தியா தோல்வி

🏎 பார்முலா–1 கார் பந்தயம்: 7–வது சுற்றில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்

*🌹🌹More education. news @ www.sstaweb.com*

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...