திருமுல்லைவாயல், அரசு மேல்நிலைப் பள்ளியில், தேர்ச்சி விகிதத்தை
அதிகரிக்க, நுழைவுத் தேர்வு நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்துவதால், ஏழை, முதல் தலைமுறை மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் சேர வரும் மாணவர்களுக்கு, வணிகவியல் பிரிவில் மட்டும் இடம் கொடுக்கப்படுகிறது.
அறிவியல், கணிதம், கணிப்பொறி அறிவியல் பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கே, அந்த பிரிவுகளில் சேர விண்ணப்பங்கள்
வழங்கப்படுகின்றன.
பெற்றோர் குமுறல்
குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, விண்ணப்பங்கள் வழங்கப்படுவதில்லை. அதனால், அதிருப்தியடைந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளி வளாகம் மற்றும் திருமுல்லைவாயல் பகுதி முழுவதும், 'குறைந்த மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களை பள்ளியில் சேர்க்காத தலைமை ஆசிரியை மீது, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
மேலும், திருமுல்லைவாயல் எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன், தன் மகள் விஜயஸ்ரீயை, பள்ளியில் சேர்க்காதது குறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம், கடந்த திங்கட்
கிழமை புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
என் மகள், 10ம் வகுப்பு தேர்வில், 58 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளதால், நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றால் தான், பள்ளியில் சேர்க்க முடியும் என்று கூறி, தேர்வு வைத்தார். தேர்வு எழுதுவதற்கு முன்னரே, விடைத்தாளை பெற்றுக் கொண்டு பள்ளியில் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டார்.
கடந்த ஆண்டும்...
தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்யும் என் போன்ற ஏழைகள், அரசு பள்ளியிலேயே படிக்க வைக்க முடியாது என்றால், வேறு எங்குபோய் சேர்ப்பது. என் மகளை அந்த பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.பிரபு, 37, கூறியதாவது:
பள்ளியின் தலைமையாசிரியர், அரசு விதிகளுக்கு புறம்பாக நுழைவுத் தேர்வு நடத்தி, மாணவர்களை சேர்க்கிறார். கடந்த ஆண்டு மேல்நிலை வகுப்பு
களுக்கு, 350 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. ஆனால், 180 மாணவர்களை மட்டுமே சேர்த்தார்.
மற்ற விண்ணப்பங்களை, பல்வேறு காரணங்கள் காட்டி நிராகரித்துவிட்டார். நிராகரித்ததற்கான காரணம் குறித்து நாங்கள் கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். நாங்கள் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதற்காக, நுழைவுத் தேர்வு நடத்தி, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே விண்ணப்பங்களை கொடுத்து வருகிறார். இதனால், ஏழை, முதல் தலைமுறை மாணவர்கள் பாதிக்கப்பட்டு
உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 10ம் தேதி, பிளஸ் 1 வகுப்பில் சேர விண்ணப்பம் வாங்க பள்ளிக்கு சென்றோம். 'நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றால் தான், சேர்த்துக் கொள்வோம்' என்றனர். தேர்வு எழுத சென்றபோது, அங்கு நான் மட்டுமே இருந்தேன். வினாத்தாள் கொடுத்தனர். அதில், கணிதப் பாடத்தில் இருந்து, 12 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பதில் எழுத துவங்கும் முன், தாளை வாங்கினர். பின், என்னை பள்ளியில் சேர்க்க மறுத்தனர். தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க வசதியில்லை. கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயஸ்ரீ, 16, சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவி
ஒவ்வொரு பாடத்திலும் வெறும், 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களை அறிவியல்
பாட பிரிவில் சேர்க்க முடியுமா? அவ்வாறு சேர்த்தால் அவர்கள் வெற்றிபெறுவதில் சிக்கல்
ஏற்படும். மதிப்பெண் அடிப்படையில் தான், வணிகவியல், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் சேர்க்கிறேன். மேல்நிலை மாணவர்களுக்கு இன்னும் சேர்க்கை முடியவில்லை. செப்டம்பர்
மாதம் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இன்பராணி திலகவதி, தலைமை ஆசிரியை