வேடசந்துாரை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவர், தனது மகனின் கல்விக்காக 'ஸ்டேட் பாங்கில்' கல்விக்கடன் பெற்றார். கடனை செலுத்தாத நிலையில், கடன் தொகையை கேட்டு 'ரிலையன்ஸ்' நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரை
சேர்ந்தவர் சந்திரசேகர்,55. பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர். இவரது மகன் கமலேஷ்வரன்,26. கரூரில் உள்ள தனியார் கல்லுாரியில் இ.சி.இ., பட்டயப்படிப்பு மூன்று ஆண்டுகள் 2010--2012 ஆண்டுகளில் படித்தார். அப்போது இவரின் கல்வி செலவுக்காக, வேடசந்துாரில் உள்ள 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வில் ரூ.1.80 லட்சம் கல்விக்கடன் பெற்றார். கமலேஷ்வரன் இன்னும் வேலைக்கு செல்லாததால், கல்விக்கடனை செலுத்த இயலவில்லை.
இந்நிலையில், பாங்கில் வாங்கிய ரூ.1.80 லட்சம் கல்விக்கடனை வசூலிக்கும் விதமாக ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 175 செலுத்துமாறு ரிலையன்ஸ் ஏ.ஆர்.சி., எஸ்.பி.ஐ., என்ற பெயரில் கமலேஷ்வரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து வேடசந்துார் ஸ்டேட் பாங்கின் மேலாளர் செந்தமிழ் செல்வனிடம் கேட்டபோது; வங்கி சார்பில் கொடுத்த கல்விக்கடனை வசூலிக்கும் உரிமையை, ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதனால் பணத்தை வசூலிக்கும் நோக்கில், நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கும், என்றார்.