வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், கடந்த ஐந்து ஆண்டுகளில், 77 ஆயிரத்து, 271 பேர் அரசு துறையில் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது, அவரிடம்
அதிகாரிகள் கூறியதாவது:
வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 82.94 லட்சம் பேர், அரசு வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர். இவர்களில், 45 லட்சம் பேர், தங்களின் உயர்கல்வியை தொடர்ந்து கொண்டிருப்பவர்களாக கருதப்படுபவர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு, அரசு துறையில், 77 ஆயிரத்து, 271 பேர்; தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம், 1.22 லட்சம் பேர் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது, பெரும்பாலான பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவதால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள, தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம், போட்டித் தேர்வுகளில் பங்கேற்க, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. அயல்நாட்டு வேலை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கேட்டு, 20 ஆயிரத்து, 773 மனுதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.