சட்டசபை தேர்தலின் போது, 'டாஸ்மாக் மதுபான கடைகளின் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக பதவியேற்றதும், 'டாஸ்மாக்' கடைகளின் பணி நேரத்தை குறைத்து உத்தரவிட்டார்.
இதனால், தினமும் காலை, 10:00 மணிக்கு திறக்கப்பட்ட கடைகள், மே, 24 முதல் பகல், 12:00 மணிக்கு திறக்கப்படுகின்றன. அதேபோல, 500 டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிட்டார். அதனடிப்படையில், டாஸ்மாக் மேலாளர்கள், மண்டல மேலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள் அளித்த பரிந்துரைப்படி, 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டன. அந்தக் கடைகள் இன்று முதல் மூடப்படும். 'இந்தக் கடைகளில் உள்ள மதுபானங்கள், குடோனுக்கு எடுத்துச் செல்லப்படும்'
என, டாஸ்மாக் மேலாண் இயக்குனர் திரிலோக் குமார் அறிவித்துள்ளார்.
ஊழியர்களுக்குபுதுப்பணி
இன்று மூடப்படும், 500 டாஸ்மாக் கடைகளில் உள்ள பணியாளர்களை, பணி மூப்பு அடிப்படையில், அந்தந்த மாவட்டத்தில் காலியாக உள்ள மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்
ஆகிய பணியிடங்களில் நியமிக்க வேண்டும்.
தினமும் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் மதுபானம் விற்பனையாகும் கடைகளில், கூடுதலாக ஒரு மேற்பார்வையாளரை நியமிக்கலாம். தினமும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மதுபானம் விற்பனையாகும் கடைகளில், கூடுதலாக ஒரு விற்பனையாளர் அல்லது உதவி விற்பனையாளரை நியமிக்கலாம். மாவட்ட மேலாண் அலுவலகத்தில் ஏழு மேற்பார்வையாளர்களை
நியமிக்கலாம்.
மாவட்ட அளவிலான பறக்கும் படையில், 10 மேற்பார்வையாளரை நியமிக்கலாம். முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில், 10 மேற்பார்வையாளரை நியமிக்கலாம்.
மாவட்டத்தில் கூடுதல் ஊழியர் இருந்தால், அவ்விவரங்களை முதுநிலை மண்டல மேலாளர் தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கட வேண்டும். அவர்கள் வேறு மண்டலத்திற்கு மாற்றப்படுவர் என, டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளதுஊழியர்களுக்குபுதுப்பணி
இன்று மூடப்படும், 500 டாஸ்மாக் கடைகளில் உள்ள பணியாளர்களை, பணி மூப்பு அடிப்படையில், அந்தந்த மாவட்டத்தில் காலியாக உள்ள மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்
ஆகிய பணியிடங்களில் நியமிக்க வேண்டும்.
தினமும் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் மதுபானம் விற்பனையாகும் கடைகளில், கூடுதலாக ஒரு மேற்பார்வையாளரை நியமிக்கலாம். தினமும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மதுபானம் விற்பனையாகும் கடைகளில், கூடுதலாக ஒரு விற்பனையாளர் அல்லது உதவி விற்பனையாளரை நியமிக்கலாம். மாவட்ட மேலாண் அலுவலகத்தில் ஏழு மேற்பார்வையாளர்களை
நியமிக்கலாம்.
மாவட்ட அளவிலான பறக்கும் படையில், 10 மேற்பார்வையாளரை நியமிக்கலாம். முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில், 10 மேற்பார்வையாளரை நியமிக்கலாம்.
மாவட்டத்தில் கூடுதல் ஊழியர் இருந்தால், அவ்விவரங்களை முதுநிலை மண்டல மேலாளர் தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் வேறு மண்டலத்திற்கு மாற்றப்படுவர் என, டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.