மத்திய அரசு வழங்கும் சம்பளம் வேண்டும்: டாக்டர்கள் வலியுறுத்தல்...

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக, மாநில அரசு டாக்டர்களுக்கு, சம்பளம் வழங்க வேண்டும்,'' என, தமிழக அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் லெட்சுமி நரசிம்மன் கூறினார்.இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
பெரிய வித்தியாசம்டாக்டர்கள்
பயிற்சியை முடித்து, மத்திய, மாநில அரசுகளின் மருத்துவமனைகளில் பணியில் இணையும்போது,சம்பளத்தில் பெரிய அளவில் வித்தியாசம் காணப்படுகிறது.மத்திய அரசு பணியில் உள்ள டாக்டர்கள், நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் நிலையில், 15 ஆயிரத்து, 600 ரூபாய் அடிப்படை சம்பளம், 6,600 ரூபாய் தர ஊதியம் பெறுகின்றனர். இந்த சம்பளத்தை, மாநில அரசு டாக்டர்கள் பெற, 15 ஆண்டுகள் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.
மத்திய அரசு டாக்டர்கள், 13 ஆண்டுகள் பணியாற்றும் நிலையில், 37 ஆயிரத்து, 400 ரூபாய் அடிப்படை சம்பளத்துடன், 8,700 ரூபாய் தர ஊதியத்தை பெறுகின்றனர். இந்த நிலையை மாநில அரசு டாக்டர்கள் அடைய, 20 ஆண்டுகள் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.ஒரே கல்வி தகுதி கொண்ட டாக்டர்களுக்கு, இந்த மாறுபட்ட சம்பளம் வழங்கப்படுவது, மாநில அரசு டாக்டர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முரண்பாடுமத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளத்தை, மாநில அரசு டாக்டர்களுக்கும் வழங்கும் பட்சத்தில், அரசு டாக்டர்கள் தங்களின் ஓய்வை கடந்தும் பணியாற்ற தயாராக உள்ளனர்.
தமிழக அரசின் அரசாணையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், சலுகைகள் மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு டாக்டர்களுக்கு சம்பள முரண்பாடு ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை, மாநில அரசு டாக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில், கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. சேலத்தில் நாளை கையெழுத்து இயக்கம் துவங்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...