தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) முதல் மூட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்படும் நேரம் காலை 10 மணிக்குப் பதிலாக நண்பகல் 12 மணியாக, இரண்டு மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 500 டாஸ்மாக் மதுக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) முதல் மூடப்படும் எனவும் முதல்வர்
ஜெயலலிதா அறிவித்தார்.
இதன்படி, மண்டல வாரியாக மூடப்படும் கடைகளின் எண்ணிக்கை விவரங்களை டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-
எப்படி நியமனம்? மூடப்படும் கடைகளில் பணியாற்றக் கூடிய கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் ஆகியோர் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்துக்குள்ளேயே வேறு கடைகளின் காலிப் பணியிடங்களில் பணிமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர்.
மே மாத காலத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.3 லட்சம் அல்லது அதற்கு மேல் விற்பனையாகி இருக்கக் கூடிய கடைகளில் கூடுதலாக ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவர்.
ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் சராசரி விற்பனையாகி இருக்கக் கூடிய கடைகளில் கூடுதலாக ஒரு விற்பனையாளர் அல்லது உதவி விற்பனையாளர் நியமனம் செய்யப்படுவார்.
ஒரு மண்டலத்துக்கு உட்பட்ட வேறு மாவட்டங்களில் கண்காணிப்பாளர்களோ, விற்பனையாளர்களோ, உதவி விற்பனையாளரோ பணிசெய்ய விரும்பினால் அங்குள்ள காலிப் பணியிடங்களில் பணியமர்த்தப்படுவர். இதற்கான பணி நியமன உத்தரவை மூத்த மண்டல மேலாளர் அளிப்பார்.
கண்காணிப்பாளர்களுக்கு பணி: ஏழு கண்காணிப்பாளர்கள் மாவட்ட மேலாளர் அலுவலங்களிலோ, மாவட்ட மேலாளர்களுக்கு உதவும் வகையிலோ பணியமர்த்தப்படலாம். அவர்களுக்கான பணி வரையறைகள் பின்னர் வெளியிடப்படும்.
மேலும் 10 கண்காணிப்பாளர்கள் மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட பறக்கும் படைகளில் பணி நியமனம் செய்யப்படலாம்.
மூத்த மண்டல மேலாளர் அலுவலகங்களில் 10 கண்காணிப்பாளர்கள் பணி நியமனம் செய்யப்படலாம்.
விடுப்பினாலோ, பணியாளர்கள் விடுவிக்கப்படுவதாலோ ஏற்படும் காலிப் பணியிடங்களில் கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் நியமனம் செய்யப்படும் போது ஒவ்வொரு பிரிவிலும் 10 சதவீதம் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்.
ஒரு மண்டலத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அது குறித்த விவரங்களை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அந்த ஊழியர்கள் வேறு மண்டலங்களில் உள்ள கடைகளில் பணியமர்த்தப்படுவர்.
இந்த உத்தரவுகளின் மீதான செயல்பாட்டு நடவடிக்கை அறிக்கையை அனைத்து மண்டல மேலாளர்களும் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த உத்தரவுகளை அப்படியே மாறாமல் பின்பற்ற வேண்டும் என்று கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார்.