ஐ.டி.ஐ.,க்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்....!

அரசு தொழில் பயிற்சி நிறுவனமான, ஐ.டி.ஐ.,க்களில் சேர்ந்து படிக்க விரும்புவோர், விண்ணப்பம் சமர்ப்பிக்க, இன்றே கடைசி நாள். தமிழகத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், ஐ.டி.ஐ.,க்கள் நடத்தப்படுகின்றன. இதில், பொறியியல் சார்ந்த, பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் பயிற்சிகள்
அளிக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி அடைந்தோர், இதில் சேர முடியும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இன்றே கடைசி நாள். 'மாவட்டம் வாரியாக கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...