ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் இரும்பு இதயம் கொண்ட இடைநிலை ஆசிரிய பெருமக்களே! அனைவருக்கும் வணக்கம்! எதிர்வரும் சனிக்கிழமை 18.06.2016 காலை 10- முதல் 1 மணிவரை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரிலுள்ள ASG மண்டபத்தில் நமக்கான ஊதிய பிரச்சனை, அதன் பின் விளைவுகள் அவற்றை களைவதன் மூலம் பெறக்கூடிய பண, பணிப்பயன்கள் ஆகியவை குறித்து ஆதாரப்பூர்வமான விளக்க உரை மற்றும் நடைமுறை
சாத்தியக்கூறுகள், நமது பங்களிப்பு, கடந்து வந்த பாதைகள், அவற்றின் மூலம் பெறப்பட்ட முன் அனுபவங்கள் ஆகியவை குறித்து ஔிவு மறைவற்ற வெளிப்படையான கலந்துரையாடல் போன்றவையோடு பாதிப்புக்குரியோரின் ஆலோசனைகள் ஆகியவையும் கேட்கப்பட்டு முன் எப்போதுமில்லாத, வேறு எந்த ஒரு சங்கமும் முன்னெடுக்காத வெளிப்படையான அணுகுமுறை வழியாக நடைமுறைக்கு உகந்த நிலைப்பாடுகள் மாநிலந்தழுவிய ஆசிரிய நண்பர்களின் ஒத்த கருத்திற்கிணங்க முடிவுகள் எட்டப்பட்டு ,செயல்படுத்திட SSTA அமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும் சங்கம் சார்பற்று எச்சங்க உறுப்பினரையும் பாதிப்புக்குரியோரையும் ஒன்றிணைத்து "வெற்றி காண்பதே " இக்கூட்டத்தின் நோக்கம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் ஒன்றிணைந்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது மேலான ஆலோசனைகளை வழங்கும்படியாக கேட்டுக்கொள்கிறேன். . தங்களுக்கு தொடர்பிலிருக்கும் பிற மாவட்ட, வட்டார ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களின் வாட்ஸ்அப் குழுவிற்கும் இத்தகவலை அனுப்புவதோடு ஆதரவு திரட்டி வெற்றிக்காக தோள் கொடுப்பது தங்களில் கடமைகளில் ஒன்று என நினைவூட்டி வெற்றியை நமதாக்கா பணிகிறேன். நன்றி! வணக்கம்!