காத்திருக்கும் 9 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இந்தத் தேர்வுகளை உத்தரப் பிரதேச மாநில இடைநிலைக் கல்வி தேர்வு வாரியம் (யுபிஎஸ்இஎஸ்எஸ்பி) நடத்துகிறது.

பி.ஜி. ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் என 9 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது குறைந்தபட்சம் 21 நிறைந்திருக்கவேண்டும். தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு Rs.


9,300/- to Rs. 34,800 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.upsessb.org/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...